Saturday 23 May 2009

எனது நாய் குட்டி



வா வா நாய் குட்டி
ஓடி வா நாய் குட்டி
என்னை கண்டால்
ஓடி வரும்
விளையாட அழைத்தால்
விளையாட வரும் 
உணவை கொடுத்தால்
விரும்பி உண்ணும் 
எனது செல்ல
நாய் குட்டி

Saturday 16 May 2009

கல்வியே சிறந்த செல்வம்




















கல்வியே சிறந்த
செல்வம்
கல்வி கற்காமல்
வாழ முடியுமா?
கல்வி கற்றவனுக்கு
சென்ற இடமெல்லாம்
சிறப்பு
நாங்கள் கல்வியை
பெற்றால்
கல்வி எங்களை
உயர்த்திடும்

Friday 15 May 2009

வன்னி நண்பனுக்கு ........


நான் இங்கு மகிழ்ச்சியாக வாழ்கிறேன்
நீ அங்கு மரணத்தில் வாழ்கிறாயா?
எனக்கு இங்கு உணவு உண்டு
உனக்கு அங்கு உணவு உண்டா ?
எனக்கு பெற்றோர் உள்ளனர் 
உனக்கு பெற்றோர் இருக்கிறார்களா?
நான் பாடசாலையில் கல்வி கற்கிறேன்
நீ அங்கு அகதி முகாமில் என்ன செய்கிறாய்?  

இங்கு என் காதில் பட்சிகளின் இன்னிசை கேட்கிறது
அங்கு உனது காதில் குண்டுகள் வெடிக்கும் ஓசையா கேட்கிறது? 
இங்கு எனக்கு சுதந்திரம் உண்டு
அங்கு உனக்கு சுதந்திரம் உண்டா? 

நான் பஞ்சு மெத்தை மீது உறங்குகிறேன்
நீ பதுங்கு குழியில் பதுங்கிக் கிடக்கிறாய்
நான் விமானத்தைக் கண்டவுடன்
மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பேன்

ஆனால் நீ விமானத்தைக் கண்டவுடன்
கையில் உயிரைப் பிடித்துக் கொண்டு
பதுங்கு குழிக்குள் ஓடி மறைகிறாய் .....

Thursday 14 May 2009

எங்கள் பூங்கா



அறிவு மலராய்
மலரும் பூங்காவே 
சிறுவரை தேடி வரும்
தோழனை போன்றது 
எங்கள் இனிய பூங்காவே !

Tuesday 12 May 2009

கிளி


பச்சை நிற சிறகும்
பவளம் போன்ற வாயும் 
இனிமையாக பேசும்
என் கிளியே !

 
வானில் பறந்து செல்லும்
நான் சொல்வதையே
திருப்பிச் சொல்லும் 
என் கிளியே !

என்னை கண்டால் பறந்து வரும்
பழம்களை கொடுத்தால்
விரும்பி உண்ணும்
என் கிளியே !

அன்னை



பத்து மாதம் சுமந்து என்னை
பெற்றெடுத்து வளர்த்த அன்னை
என் வளர்ச்சிக்காய் உத்திரம் தன்னை
பாலாய் ஊட்டி வளர்த்தாள் என்னை
கல்வி அறிவு ஊட்டி என்னை
நல்ல வழிகாட்டுவாள் என் அன்னை